மேஷம்:

வேலைக்கு முயற்சிக்கும் பெண்மணிகளுக்கு வெற்றி கிட்டும். வெளிநாடு சென்று பணியாற்ற வேண்டுமென்ற விருப்பம் இருப்பின், நீங்க அதற்காக இப்போது முயற்சி செய்யலாம். வெற்றி கிட்டும் என்பது மட்டுமல்ல, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உற்சாகம் நிறைந்த வாரமாக இருக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வேலையை ஹாப்பியா செய்வீங்க. மாணவர்களுக்கு சாதகமான வாரம். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் வகையில் சாதக பலன் பெறுவீங்க. உங்க முகத்தில் மகிழ்ச்சியும், ஜொலிப்பாக இருக்கும். அனைத்துத் தரப்பிலிருந்து மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் பெறுவீங்க. முன்னேற்றம் காண கடினமாக உழைப்பீங்க. முயற்சிகள் சக்ஸஸாகும்.  குடும்பத்துல மகிழ்ச்சி கிடைக்கும். மாணவர்கள் கல்வி மேம்படும். உத்தியோகத்துல உள்ளவங்களுக்கு இந்த வாரம் ஹாப்பி வாரமாக ஆகும்.

சந்திராஷ்டமம் : ஃபிப்ரவரி 3ம் தேதி முதல் ஃபிப்ரவரி 6ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் மிகுந்த கவனம் தேவை

ரிஷபம்

மனநிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீங்க. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீங்க. திடீர் செலவு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீங்க. வெளியூர், வெளிநாட்டில் உள்ள நெருங்கிய ரிலேடிவ்ஸ் கிட்டேயிருந்து நற்செய்தி கிடைத்து சந்தோஷப்படுத்தும். பங்கு மார்க்கெட் போன்றவற்றில் திடீர் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் கைகூடும். வேலைகளில் உங்க செயல்திறன் சிறப்பாக இருக்கும். எந்த துறையில் வேலை செய்தாலும் அதில் சிறப்பான பலனும், லாபமும் கிடைக்கும். குழந்தைங்களால சந்தோஷமும் உற்சாகமும் அதிகரிக்கும். புதுப் பொருள் வாங்கி சந்தோஷப்படுவீங்க.

சந்திராஷ்டமம் : ஃபிப்ரவரி 6ம் தேதி முதல் ஃபிப்ரவரி 8ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் மிகுந்த கவனம் தேவை

மிதுனம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்றே அலைச்சல் இருந்தாலும் லாபம் வரும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மனசுல ஏற்பட்டிருந்த கவலை தீரும். சொந்தத் தொழிலில் உள்ளவர்கள் சுயதொழில் ஆதாயம் பெறுவர். பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வாகன வகையில் மற்றும் சொத்து சார்ந்த வகையில் வரவும் காரிய வெற்றியும் ஏற்படும். நண்பர்கள் மற்றும் ரிலேடிவ்ஸ்ஸால் ஆதாயம் உண்டு. கலைதுறையில் உள்ளவங்களுக்கு சாதகமான வாரமாக இருக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான வாரமாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண சூழ்நிலைகள் உண்டாகும். நீண்டகால முதலீடுகளைப் பற்றி சிந்திப்பீங்க. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்ற காரியங்களில் வெற்றி அடைவீங்க.

கடகம்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வீங்க. குடும்பத்தில் நிம்மதி படியாக அதிகரித்து மகிழ்ச்சி சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே மெல்ல இணக்கம் அதிகரிக்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்க வேண்டிய வாரம். நிதி ரீதியாக வலுவான வாரமாக இருக்கும். புத்திசாலித்தனமாக வேலையை செய்ய திட்டமிடுங்கள். உங்க தொழிலில் பெரிய வெற்றி பெறலாம். அரசியல் விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.  குடும்பத்துல மகிழ்ச்சி நன்றாக இருக்கும். குழந்தைகள் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். பொறுமை நிறைந்த வாரமாக இருக்கும். உங்க பேச்சில் இனிமையும், செயலில் நிதானமும் தேவை. சிறப்பான செயல்பட்டால் மற்றவர்களை உங்க பக்கம் ஈர்ப்பீங்க. உங்க புத்திசாலித்தனத்தால் வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீங்க. உத்தியோகத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

சிம்மம்

கலகலப்பான வாரம் இது. வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை  மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வீங்க. பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வாங்க. அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவாங்க. நல்ல பண வரவு, பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு லாபகரமான சூழ்நிலை இருக்கும். வெற்றியின் உச்சத்திற்கு அழைத்து செல்லும் வகையில் உங்க பேச்சும், செயலும் இருக்கும். ஆன்மிகம், சமூகத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கும். சுறுசுறுப்பை அதிகரிச்சுக்க முயற்சி செய்ங்க.

கன்னி

எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீங்க. கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீங்க. கலைத்துறையினருக்கு ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். அரசியல்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு புத்தி சாதூரியத்துடன் நடந்து கொண்டு மற்றவர்களின் பாராட்டை பெறுவீங்க. கல்வியில் மேன்மை உண்டாகும். சிறப்பான வாரமாக இருக்கும். உங்க புத்திசாலித்தனத்தால் பணியில் மேன்மையும், மேலதிகாரிகளால் பாராடும் கிடைக்கும். சிறிய முதலீடுகளால் எதிர்காலத்தில் பயனுள்ள லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டாம்.

துலாம்

பழகுவதற்கு இனிமையான குணம் கொண்ட உங்களுக்கு இந்த வாரம் தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீங்க. தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. நிர்வாகம் தொடர்பான பணிகள் சீராக நடைபெறும். சில சங்கடம் தரக்கூடிய சூழ்நிலையால் வணிக பலவீனமாக இருக்கும். நல்லவர்களுடன் நல்லுறவு ஏற்படும். உங்க நற்பெயரும், கௌரவமும் உயரும்.

விருச்சிகம்

குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால் மனஉளைச்சல் தீர்ந்து நிம்மதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துப் போவீங்க. பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. அவர்கள் நலனில் அக்கறை காட்டுவீங்க. பெண்களுக்கு வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்பட்டாலும் கடைசியில் வெற்றிதான். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினர் புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். இன்று உங்க பழைய நண்பருடன் மகிழ்ச்சியாக உரையாட வாய்ப்புள்ளது. மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உங்க சொல், செயலில் கவனம் தேவை. புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்க தாமதமாகலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

தனுசு

துடிப்புடன் வேகமாக செயலாற்றுவீங்க. உங்களுக்கு இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். உறவினர்களின் மனக் குழப்பத்தை உண்டாக்கலாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. காரியத் தடைகள் விலகும். பயணங்கள் மூலம் நன்மை வரும். புதிய நண்பர்கள் கிடைப்பாங்க. தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்லதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். திறமையான பணியாளர்கள் அமைவாங்க. உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பாங்க. அலுவலக விஷயங்களில் விடா முயற்சி நிச்சயம் கைக்கொடுக்கும். முடிவைப் பற்றி கவலைப்படாமல் உங்க செயல்களில் கவனம் செலுத்தி உழைக்கவும்.உத்தியோகத்தில் உள்ளவங்களுக்கு உத்தியோகத்தில் தடைகளால் ஏற்பட்ட சிரமங்கள் மறையும்.

மகரம்

குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மனதிருப்தியை தரும். ஜாலியான விஷயங்களைக் கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். கலைத்துறையினருக்கு சுணங்கிக் கிடந்த காரியங்கள் மீண்டும் வேகம் பெறும். அரசியல்துறையினருக்கு நன்மைகள் உண்டாகும். பெண்களுக்கு தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும்/ எல்லா நன்மைகளும் உண்டாகும். குறைகள் நீங்கும். தடைப்பட்ட காரியங்களை செய்ய முயல்வீங்க. வணிகர்களுக்கு சற்று கடினமான நேரமாக அமையும். இருப்பினும் சோர்வடையாமல் முயற்சி செய்ங்க. வழக்கு தொடர்பான விஷயங்களில் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்.

கும்பம்

தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய அக்கறை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும். பெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். கலைத்துறையினருக்கு செலவு குறையும். அரசியல்துறையினருக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். மாணவர்களுக்குக் கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.  உத்தியோகஸ்தர்கள் வேலையைப் பார்த்து பாராட்டுவாங்க. உறவினர்கள் மூலம் உங்களுக்கு  நன்மை தரும் செயல் நடக்கும். வார்த்தைகளால் செல்வாக்குப் பெறுவீங்க.

மீனம்

தனது வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பீங்க  உங்களுக்கு இந்த வாரம் செல்வ சேர்க்கை உண்டாகும். மனசுல இத்தனை காலம் இருந்துக்கிட்டிருந்த வீண் கவலைகள் தீரும். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். எதிர்பார்த்த ஆர்டர்கிடைக்க இருந்த தாமதம் நீங்கும். உத்தியோகத்துல இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவாங்க.  சாப்பிடவோ தூங்கவோ நேரம் இல்லாமல் உழைப்பீங்க. தொழிலில் சூழ்நிலைகள் உங்க விருப்பப்படி அமையும். உங்க வியாபாரத்தில் முடங்கிக் கிடக்கின்ற சில வேலைகள் இன்று முடிக்க வாய்ப்புகள் அமையும்.  பெற்றவங்களோட இந்த வாரம் சந்தோஷமாய்க் கழியும். பழைய பிரச்னைங்க ஒவ்வொண்ணா மறைஞ்சு நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.

சந்திராஷ்டமம் : ஃபிப்ரவரி 1ம் தேதி முதல் ஃபிப்ரவரி 3ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் மிகுந்த கவனம் தேவை