சென்னை:
ரும் 27ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வெப் கேமிரா பொருத்தும் பணி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ந்தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ள ஆணையம், வாக்குச் சாவடிகளில் காமிரா பொருந்தும் பணியை தொடங்கி உள்ளது. பெரும்பாலான வாக்குச்சாவடிகள், பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்படுவதால், அங்கு காமிரா பொருத்தும் பணி மற்றும் தேர்தல் ஒத்திகை நடக்க உள்ளதால் பள்ளி வளாகங்களை திறந்து வைத்திருப்பதை உறுதி செய்ய பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளருக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், வரும் 27ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வெப் கேமிரா பொருத்தும் பணி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 234 தொகுதிகளிலும் 88 ஆயிரத்து 936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும், வரும் 22ம்தேதி மாலை வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.