டெல்லி: அரசு அலுவலகங்களில் முதல்வர் மற்றும் அரசியல்வாதி படங்களுக்கு இடமில்லை என்றும் அதற்கு பதிலாக அம்பேத்கர், பகத்சிங் படங்கள்தான் இருக்கும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்து உள்ளார்.

அரசு அலுவலகங்களில் முதல்வர், பிரதமர் படங்களை வைப்பது தொடர்பாக பிரச்சினைகள் எழுந்து வரும் சூழலில், இனிமேல் அரசியல்வாதிகள் படம் வைக்கக்கூடாது என்று அசத்தலாக அறிவித்து உள்ளார்.

டெல்லியில் குடியரசு தின விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசின் ஒவ்வொரு அலுவலகத்திலும் பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் இருக்கும் என்று இன்று (நேற்று) நான் அறிவிக்கிறேன். இனி முதல்வர் அல்லது அரசியல்வாதிகளின் புகைப்படங்களை நாங்கள் வைக்க மாட்டோம் என்று தெரிவித்து உள்ளார்.

டாக்டர் அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரால் ஈர்க்கப்பட்டதாக கூறிய முதல்வர் கெஜ்ரிவால், நாட்டிற்காக பெரிய கனவு காண வேண்டும் என்பது அவரது வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்றும்,  ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி என்ற பி.ஆர்.அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு இன்று நாங்கள் உறுதிளிக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.