லக்னோ:

உ.பி. பாரதிய ஜனதாவில் கடந்த சில வாரங்களாக உட்கட்சி பூசல் வெடித்து வருகிறது. கட்சியின் தலைமை அறிவித்த வேட்பாளர் பட்டியலில் உடன்பாடு இல்லாததால் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்சிக்காக உழைத்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்காமல் புதிதாக இணைந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கியிருப்பது கட்சிக்கு விரோதமான செயலாகும் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த தொண்டர்கள் மத்தியில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது.

ஹைதர்கஞ்ச் தொகுதியில் 2 முறை போட்டியிட்டு வெற்றி சுந்தேரியல் தீக்ஷித்துக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா கார் முன்பு விழுந்து போராட்டம் நடத்தினார் அந்த 72 வயதாகும் தீ க்ஷித். கட்சிக்காக கடினமாக உழைத்த இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது சரியல்ல என புலம்புகின்றனர் பாஜ தொண்டர்கள்.

இதேபோல் 40 வயதாகும் மனிஷ் குப்தா என்ற பாஜ பிரமுகர் கூறுகையில், ‘‘3 முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு மறு க்கப்பட்டது. ஆனாலும், நான் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தேன். வேட்பாளர் பட்டியல் வெளியாகும் வரை எனக்கு மூத்த நிர்வாகிகள் உத்தரவாதம் அளித்து வந்தனர்.

ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினேன். அவரும் தேர்தல் பணியாற்ற தயாராக இரு என்று கூறினார். ஆனால், தற்போது தொகுதிக்கு சம்மந்தமே இல்லாதவருக்கு சீட்வழங்கப்பட்டுள்ளது. அந்த வேட்பாளர் கட்சிக்கும் சொந்தமில்லை. தொகுதிக்கும் சொந்தமில்லை’’ என்றார்.

இவர் கேட்ட லக்னோ மத்திய தொகுதிக்கு பிரிஜேஷ் பதாக்குக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இவர் 7 மாதங்களுக்கு முன்பு பாஜவில் இணையும் வரை பகுஜன் சமாஜ் கட்சியில் முக்கிய பிராமனர் வகுப்பு முகமாக கருதப்பட்டவர். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் உன்னாவ் தொகுதி லோக்சபா உறுப்பினர்.

மனிஷ்குப்தா தீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர். மூன்றாவது தலைமுறையாக இந்த அமைப்பில் உள்ளவர். கட்சி தலைமையின் முடிவால் அதிருப்தி அடைந்த இவர் பாஜவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக இந்த தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

‘‘கட்சி தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த கொந்தளிப்பை அமித்ஷா புரிந்து கொள்ள வேண்டும். கட்சிக்கு இதுபோன்றதொரு பின்னடைவை இதுவரை பார்த்ததில்லை’’ என்று 20 முதல் 30 ஆண்டுகள் கட்சியில் உள்ளவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
‘‘மனிதாபிமான அடிப்படையில் இல்லாமல் மோடி மற்றும் மேல் மட்ட தலைவர்கள் முடிவு எடுக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கும், சட்டமன்ற தேர்தலுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கும். தொகுதியுடன் நெருங்கி இருப்பவர்களே சட்டமன்ற தேர்தலுக்கு போட்டியிட வேண்டும். பல வேட்பாளர்கள் கட்சியின் நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கிறார்கள்’’ என்று தொண்டர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து அமித்ஷா கூறுகையில், ‘‘வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டும சீட் வழங்கப்பட்டுள்ளது. தொண்டர்களின் கடின உழைப்புக்கு அங்கிகாரம் நிச்சயம் கிடைக்கும்’’ என தெரிவித்துள்ளார்.

‘சர்வே’ மற்றும் ‘உயர்மட்ட தலைவர்களுக்கு பின்னால் சுற்றுபவர்கள்’ ஆகியோருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற பேச்சு பாஜ தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது. ‘‘மாவட்ட மூத்த நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் ஆகியோரது கருத்துக்கள் மற்றும் பிரபலத்தின் அடிப்படையில் சர்வே மேற்கொண்டு சீட் வழங்கப்ப்டடுள்ளது.

இதில் சமீபத்தில் கட்சியில் சேர்ந்தவர்கள், தலைவர்களின் உறவினர்கள், தேர்தலில் இதுவரை வெற்றி பெறாதர்வர்களுக்கு சீட் வழங்கப்பட்டிருப்பது ஏன்?’’ என்று தொண்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பேத் பிரகாஜ் குப்தா என்பவர் அயோத்தி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சிகள் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் சமீபத்தில் பாஜவில் இணைந்தார். அவருக்கு தற்போது சீட் வழங்கப்பட்டுள்ளது. பாஜ மாவட்ட செயலாளர் அவதேஷ் பாண்டே பாதல் மற்றும் எம்பி லல்லு சிங் ஆகியோருடன் தொண்டர்கள் இணைந்து இதற்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர்.

மேலும் ‘‘அயோத்தி தொகுதியில் குப்தா இது வரை தொடர்ந்து போட்டியிட்டும் வெற்றி பெறவில்லை. அவருக்கு வாய்ப்பு கொ டுத்து இந்த முறையும் தோல்வியை சந்திக்க கட்சி தயாராகிவிட்டது’’ என்று பாஜ தொண்டர் ஒருவர் தெரிவித்தார்.
அமேதி தொகுதியில் உமா சங்கர் பாண்டே என்ற வக்கீல், மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணிக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பூத் ஏஜென்டாக பணியாற்றியவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 72 வயதாகும் ஆர்எஸ்எஸ் பிரமுகரான தேஜ்பன் சிங்குக்கு வ £ய்ப்பு மறுக்கப்பட்டு உமா சங்கருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அமேதியில் உள்ள கவுரிகஞ் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் வாரனாசி, நொய்டா, ஹமிர்பூர், லக்னோ தொகுதி வேட்பாளர்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
தேஜ்பன் சிங் கூறுகையில், ‘‘முட்டாள் தனமான சர்வேயில் உமா சங்கர் பாண்டேயின் பெயர் எப்படி வந்தது. தொகுதிக்கு அறிமுகம் இல்லாத இவரது பெயரை கட்சியில் மேல் மட்ட நிர்வாகிகள் பரிந்துரை செய்துள்ளனர்’’ என்றார்.

பாஜ மாவட்ட தலைவர் அவதேஷ் கூறுகையில்,‘‘ சீட் கிடைக்காத வருத்தம் ஏற்படுவது நியாயம் தான். அடுத்தவருக்கு சீட் கிடைத்துவிட்டதே என்று ஆதங்கப்படுவதும் மனித இயல்பு. ஆனால், அதை உடனடியாக மறந்துவிட்டு தேர்தல் பணியாற்ற வேண் டும்’’ என்றார்.

பாராபங்கி மாவட்டத்தில் ராம்நகர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு ராம் பாபு திவிவேதிக்கு மறுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண் டுகளாக இவர் அந்த தொகுதியில் பணியாற்றி வருகிறார். ஆனால் தற்போது இவர் நொய்டாவில் ராஜ்நாத் சிங் மகன் பங்கஷ் சிங் குக்கு பிரசாரம் செய்து கொண்டிருந்த அவர் திரும்பி வந்துவிட்டார்.

திவிவேதி கூறுகையில்,‘‘ ராம்நகருக்கு வெளியில் இது வரை நான் 24 மணி நேரம் இருந்தது கிடையாது. குடும்பத்தை மறந்து அர்ப்பணிப்போடு பணியாற்றி வந்தேன். தற்போது ராம்நகர் தொகுதி வேட்பாளர் அறிவிப்பை கேட்டவுடன் எனது இதயமே வெடித்துவிடும் போல் இருந்தது. அமித்ஷாவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு கட்சி பணியாற்றி வந்தேன்’’ என தெரிவித்தார்.

மேலும் பணம் வாங்கிக் கொண்டு சீட் கொடுக்கப்பட்டதாகவும் வதந்திகள் பரவி வருகிறது. குஜாரத்திகள் எங்களை தாக்குவதை நிறுத்த வேண்டும் என்று கோஷங்கள் பாஜவில் எழும்பி வருகிறது. உபி பாஜவில் தற்போது ஏற்பட்டு வரும் குழப்பங்களுக் குஜர £த்தை சேர்ந்த அமித்ஷா தான் காரணம் என்று கட்சியினர் வெளிப்படையாகவே குமுறுகின்றனர். தவறான வேட்பாளர்களை தேர்வு செய்ததற்கு அவர் தான் பொறுப்பு.

உபி.யில் பாஜ வெற்றி வாய்ப்பை இழந்தால் அமித்ஷா வெளியேறிவிட வேண்டியது தான். அதேபோல் மோடிக்கும் இது தான் இறுதி என்றும் கட்சியினர் கூறுகின்றனர்.

தேஜ்பன் சிங் அமித்ஷாவுக்கு எதிராக வெளிப்படையாக குரல் கொடுத்து வருகிறார். அமித்ஷாவுக்கு உபி அரசியல் புரியவில்லை. அவர் ஹெலிகாப்டரில் வந்து கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு சென்றுவிடுகிறார். அவர் எங்களை அங்கிகரிப்பதில்லை’’ என்று தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், அமேதியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலையை ஏற்படுத்த நினைத்தால், அமித்ஷா எங்களுக்கு எதிரான அலையை திருப்பி விடுகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.