சென்னை

முல் நிறுவனத்தின் பால் கொள்முதல் விலை ஆவினை விட அதிகம் என சொல்வது தவறு என அமுல் விளக்கம் அளித்துள்ளது.

அமுல் நிறுவனம் தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதலைப் பாதிக்கும் வகையில் செயல்படுவதாகவும்  அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

இது குறித்து அமுல் நிறுவன ஒப்பந்ததாரர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”தமிழகத்தில் ஒரு கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும் நிலையில் 36 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவின் கொள்முதல் செய்கிறது.  மேலும் அமுலுக்குப் பால் வழங்க வேண்டும் எனில் ஆவினிடமிருந்து என் ஓ சி சான்றிதழ் பெற விதிகள் உள்ளன.

தவிர ஆவின் நிறுவனம் விவசாயிகளுக்கு நிர்ணயித்த கொள்முதல் விலையே தாங்களும் நிர்ணயித்திருக்கிறோம். எனவே ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல் பால் கொள்முதல் செய்வதாக் கூறும் தகவல் முற்றிலும் பொய்யானது.

தமிழக விவசாயிகளிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் முறைந்த விலைக்கே பால் கொள்முதல் செய்கின்றன. நாங்கள் ஆவின் நிறுவன பால் முகவர்களிடம் அமுல் நிறுவனத்திற்குப் பால் வழங்க வேண்டும் என பேச்சு நடத்தவில்லை.

ஆவின் கொள்முதல் விலையாக என்ன விலையை நிர்ணயம் செய்துள்ளதோ அதே விலைக்கே நாங்களும் கொள்முதல் செய்துள்ளோம். தமிழக விவசாயிகளிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் குறைந்தே விலைக்கே பால் கொள்முதல் செய்கின்றன. எனவே விவசாயிகளின் பாதிப்பைத் தடுக்கவே அமுல் செயல்படுமே தவிர ஆவின் நிறுவனத்திற்கு எதிராகச் செயல்படாது.”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.