சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.51 அடியாகவும், நீர்வரத்து 14,514 அடியாகவும் குறைந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.51 அடியாக உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் நல்ல மழை பெய்து வரும் நிலையிலும், கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் பாகுபாடு காட்டி வருகிறது. இதனால் நேற்று மாலை வரை  அணைக்கான நீர்வரத்து 16,301 கனஅடி அளவில் இருந்த நிலையில், இன்று காலை 14,514 கனஅடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 35.79 டி.எம்.சியாக இருந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.51 அடியாகவும், நீர் இருப்பு 35.79 டிஎம்சியாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட விவசாய பாசன தேவைக்கு 12,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.