விழுப்புரம்: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து, விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் மூடப்படும் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, விழுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள  ஜெயலலிதா பல்கலைக்கழகம் பெயரளவுக்கு இருப்பதாகவும் அந்த பல்கலைக்கழகத்தின் நிதி நிலைமை நன்றாக இல்லை என்றும் அதனால் அந்த பல்கலைக்கழகம் மூடப்படும் என்று தெரிவித்தார்

அண்ணாமலை பல்கலைக்கழகம் நிதி இல்லாமல் சிரமப்படுவதாக எனவே அந்த பல்கலைக்கழகத்தை அப்ளியேட் பல்கலைக்கழகமாக மாற்ற முடிவு செய்துள்ளோம்.

நிதிநிலை மற்றும் மாணவர்களின் நலன் கருதி 4 மாவட்ட கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளாக இணைக்கப்படும் என்றும் இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

மேலும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மயிலாடுதுறை மாவட்டங்கள் உள்ள கல்லூரிகளும் அண்ணாமலை பல்கலைகழகத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.,

இவ்வாறு அவர் அவர் கூறினார்.

விழுப்புரத்தை தலைமையகமாக கொண்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அதிமுக அரசின்  சட்டப்பேரவை கடைசி கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டு, அதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்து, அதை நிறைவேற்றி, உடடியாக ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகமும் உருவாக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் விழுப்புரம் , கள்ளக்குறிச்சி,கடலூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள்  வரும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த பல்கலைக்கழகம் மூடப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார். இது  விழுப்புரம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.