தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் வெயில் 100°Fக்கு அதிகமாக பதிவானது. அதிகபட்சமாக சென்னையில் 106°F வெப்பம் பதிவானது.

மே இரண்டாம் வாரம் கத்திரி வெயில் ஆரம்பித்த நிலையில் பல இடங்களில் வெயில் அதிகரித்தது.

கடந்த வாரம் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதை அடுத்து தென் தமிழகத்தின் பல இடங்களில் கனமான மழையும் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்தது.

இந்த நிலையில் வங்கக் கடலில் உருவான ரெமல் புயல் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்ததை அடுத்து நேற்று முதல் மீண்டும் வெயில் வாட்டி வருகிறது.

சென்னை, தவிர, திருத்தணி, வேலூர், திருப்பத்தூர், மதுரை, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர் ஆகிய இடங்களில் இன்று 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது.