சென்னை: விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை பாறையை இணைக்க ரூ.37 கோடியில் கடல் சார் நடைபாலம் அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்டு 13ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  இன்று வணிகவரி, பதிவுத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை  மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் மூர்த்தி, ஏ.வ.வேலு ஆகியோர் மானிய கோரிக்கை தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டனர்.

நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில் , கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவுப் பாறையையும், திருவள்ளுவர் சிலை பாறையையும் இணைக்கும் ஏறத்தாழ 140 மீட்டர் நீளம் கொண்ட கடல் சார்பாலம் ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலத்திற்கான செலவில் 50% மத்திஅரசின் நிதியுதவியுடனும், 50% தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் சொந்த நிதியில் இருந்தும் அமைக்கப்படும். இந்ததிட்டம்  சாகர்மாலா, உள்நாட்டு சரக்கு தோணித்துறை திட்டத்தின் கீழ் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.