சாலைப் பணியை மொத்தமாக காண்ட்ராக்ட் எடுக்கும் பேக்கேஜ் சிஸ்டம் ரத்து 

Must read

சென்னை: 
சாலைப் பணி மொத்தமாக காண்ட்ராக்ட் எடுக்கும் பேக்கேஜ் சிஸ்டம் ரத்து செய்யப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலை கூட்டத்தொடரில் இன்று நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது,சட்டப்பேரவையில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது, “ஒரு கோட்டத்தில் ஒரே ஒப்பந்ததாரர் சாலைப் பணிகளை மொத்தமாக காண்ட்ராக்ட் எடுக்கும் பேக்கேஜ் முறை இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது.மேலும்,தரமற்ற சாலைகளை அமைத்த ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தரமற்ற சாலைகளை அமைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”,என்று தெரிவித்தார்.

More articles

Latest article