31 ஆம் தேதி அன்று 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு

Must read

சென்னை

வரும் 31 ஆம் தேதி அன்று 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது.

கடந்த ஆட்சியில் வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்கள் உருவாகின.

ஏற்கனவே 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த 9 மாவட்டங்களில் தேர்தல் நடக்கவில்லை.  உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் தேர்தலை முடிக்க உத்தரவிடப்பட்டது.

இதையொட்டி தேர்தல் ஆணையம் இந்த தேர்தலுக்கான பணிகளை நடத்தி முடித்தது.   விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் வரும் 31 ஆம் தேதி இந்த தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.  பட்டிலில் பெயர் உள்ளதோர் வாக்காளர் பதிவு அலுவலரிடம் முறையிடலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

More articles

Latest article