கோயம்புத்தூர்,
பால் அலுவலகத்தில் காலையில் இருந்து காத்திருந்து, ரூபாயை மாற்றியதும் கீழே விழுந்து உயிரிந்தார் தொழிலாளி. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை பெரியநாயக்கன்பாளையம், ஜோதிபுரம் சாரங்கன்காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 57). இவர் கோவை கணபதியில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
செலவு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த அவர், இன்று அதிகாலையிலேயே கோவை கணபதி பகுதியில் உள்ள துணை தபால் அலுவலகத்தில் பணத்தை மாற்றுவதற்காக காத்திருந்தார்.
dead
தபால் அலுவலகம் காலை 9 மணிக்கு திறந்த பிறகுதான் பணம் மாற்றிகொடுக்கப்பட்டது. காலையில் இருந்தே வரிசையில் நின்றதால் வயதான அந்த தொழிலாளி மிகவும் சோர்வாக காணப்பட்டார்.
வெகுநேரம்   காத்திருந்த பின்னர் தபால் அலுவலக அதிகாரிகளிடம் ரூ.4 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு சோர்வுடன் நடந்து வந்த ராஜேந்திரன்  திடீரென்று அலுவலக வளாகத்தில் மயங்கி விழுந்தார்.
அவருடன் வந்த மற்றொரு தொழிலாளி விஜயகுமாரும், வரிசையில் நின்றவர்களும் ராஜேந்திரனை தூக்க முயன்றனர். ஆனால் அவர் உணர்வற்ற நிலையில் கிடந்தார்.
எனவே ஆம்புலன்சு வரவழைத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தினர்.
இதைத்தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள ராஜேந்திரனின் வீட்டுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.
காலையில் தெம்பாக சென்றவர், பிணமாக வந்ததை பார்த்து ராஜேந்திரனின் மனைவி சுசிலா, மகன் தாமோதரன், மகள் மகேஸ்வரி ஆகியோர் கதறி துடித்தனர்.
இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.