0
மிழக முதல்வர்  ஜெயலலிதா,  உடல்நலக் குறைவால் கடந்த செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  தற்போது அவரது உடல்நலம் குணமடைந்து விட்டது என்றும் விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
a
 
இந்நிலையில் ஜெயலலிதா அறிக்கை ஒன்று விடுத்துள்ளார்.
அதில் ‘‘மக்கள் பிரார்த்தனையால் மறுபிறவு எடுத்துள்ளேன். இறைவனின் திருவருளால் நலம் பெற்று திரும்புவேன். ஓய்வு நான் அறியாதது. உழைப்பு என்னை நீங்காது. மக்களின் பேரன்பு
b
இருக்கும்போது எந்த குறையும் எனக்கில்லை. வெகுவிரைவில் முழுமையான நலம்பெற்று பணிக்கு திரும்புவேன். வழக்கமான பணியில் ஈடுபட காத்திருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.