வேலூர்,
ன்னுடன் அமெரிக்காவில் குடும்பம் நடத்திவிட்டு, தற்போது வேறு பெண்ணை மணம் முடிக்க இருந்த காதலன் மீது புகார் கொடுத்துள்ளார் வேலூர் பெண் எஞ்சினியர்.
அமெரிக்காவில் தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்ய இருக்கும் இளைஞர்மீது உடுமலை காவல்துறையில் இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் சுகாசினி. வேலூர் மாவட்டம் குடியாத்தம் வள்ளுவர்நகர் பகுதியை சேர்ந்தவர். இவருக்கும், அவருடன் வேலை செய்து வரும்  திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த  இளைஞரும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதல் இருந்து வந்துள்ளது.
இதன் காரணமாக இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருந்து கணவன் மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர். லிவிங் டு கெதர் என்ற முறையில் இருவரும் வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில், அவரது காதலர் திடீரென உடுமலைக்கு வந்துள்ளார்.
இதனால், சந்தேகம் அடைந்த சுகாசினி தனது காதலர் குறித்து, மற்ற நண்பர்களிடம் விசாரித்துள்ளார். அதில், அவருக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சுகாசினியும் உடனடியாக இந்தியா திரும்பினார். உடனே உடுமலைக்கு சென்று அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
tvs-3
இதுகுறித்து சுகாசினி கூறியதாவது,
”நாங்கள் இருவரும் காதலித்துவந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக அமெரிக்காவில் ஒரே வீட்டில் கணவன்– மனைவிபோல் வாழ்ந்து வந்தோம். இந்நிலையில் சிலநாட்களுக்கு முன்பு இந்தியா திரும்பிய அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து வேறொரு பெண்ணை திருமணம் செய்வதாக தெரிவித்தார்.
இதனையடுத்து நான் கடந்த 10–ந்தேதி காலை இந்தியா வந்தேன். என்னை நம்ப வைத்து ஏமாற்றி மோசடி செய்த அவர்மீதும் அவருக்கு உதவியாக இருந்தவர்மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கூறினார்.
இதுகுறித்து சுகாசினி திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.