லியோ படத்திற்குப் பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் நடிகர் நடிகைகள் விவரம் இன்று வெளியானது.

மோகன், பிரஷாந்த், பிரபு தேவா, ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்தரி, அஜ்மல் அமீர், யோகிபாபு, விடிவி கணேஷ், உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இவர்களுடன் வெங்கட் பிரபு கேங்கை சேர்ந்த வைபவ், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில் தற்போது தளபதி 68 படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.