இம்பால்: இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள மணிப்பூரில் இன்று முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வரமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மணிப்பூர் ஆளுநர்  எல். கணேசன் இம்பாலில் உள்ள தம்பசானா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார்

60 தொகுதிகளைக்கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.  அங்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று (பிப்ரவரி 28) முதல்கட்ட வாக்குப்பதிவும், மார்ச் 3-ம்தேதி 2வது வட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. மாநிலத்தில்,  இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி  தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அதே நேரத்தில் ஆட்சியை கைப்பற்ற பாரதிய ஜனதா கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இன்று முதல் கட்டமாக  38 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 173 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் 22 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த உள்ளனர்.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின்ஹீங்காங் தொகுதியில்  முதல்வர் என் பிரேன் சிங் போட்டியிடுகிறார், சிங்ஜமேயிலிருந்து சபாநாயகர் ஒய் கெம்சந்த் சிங், யூரிபோக்கில் இருந்து துணை முதல்வர் யும்னம் ஜாய்குமார் சிங் மற்றும் நம்போலில் இருந்து மாநில காங்கிரஸ் தலைவர் என் லோகேஷ் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மணிப்பூர் ஆளுநர்  எல். கணேசன் இம்பாலில் உள்ள தம்பசானா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார். பின்னர் செய்தியளார்களை சந்தித்தபோது,  “மணிப்பூர் மக்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன், ஏனென்றால் நம் நாட்டில் ஜனநாயகம் நிலவுகிறது மற்றும் ஜனநாயகத்தின் அடையாளம் தேர்தல் என்றார்.

முன்னாள்  முதல்வரும் பாஜக வேட்பாளருமான என் பிரேன் சிங் வாக்களிக்க இம்பாலில் உள்ள ஸ்ரீவான் உயர்நிலைப் பள்ளியில் தனது மனைவியுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். அப்போது,  “எனது தொகுதி மக்கள் மற்ற வாக்காளர்களுடன் தங்கள் மதிப்புமிக்க வாக்குகளை அளிக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய ஜனநாயக அதிகாரத்தைப் பயன்படுத்தவும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

கொரோனா கட்டுபாட்டு  நடவடிக்கைகளை பின்பற்றி வாக்களிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளில் காவல்றையினர் ஈடுபட்டு வருகின்றனர்.