விஸ்வரூபம் 2 வெளிவராது!: பி.ஜெயினுலாபுதீன் (வீடியோ)

Must read

மல் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம், விஸ்வரூபம் 2.  இதன் முதல் பாகம் வெளியானபோது இஸ்லாமிய அமைப்புகள் சில கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பெரும் சர்ச்சைகளுக்குப் பிறகு முதல் பாகம் வெளியானது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடும் முயற்சியில் இருக்கிறார் கமல்ஹாசன். இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகளை அமெரிக்காவில் செய்து வருகிறார்.

ஜெயினுலாபுதீன் – “விஸ்வரூபம்” கமல்

ஆனால் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், வெளிவராது என்று தவ்ஹீத் ஜமா அத் தலைவர் பி.ஜெயினுலாபுதீன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதில் ஜெயியினுலாபுதீன், “விஸ்வரூபம் 2ம் பாகம் வெளிவரவே வராது.  கமல் வடிகட்டின கோழை. விஸ்வரூபம் 1 படத்தில் பிரச்சினை வந்தபோது பேச்சுவார்த்தை நடந்தபோதே ஆடிப்போய்விட்டார்.

மணிரத்தினம் வீட்டில குண்டுபோட்டது வெடிக்கல… ஆனா படத்தை வெளியிட்டா வெடிக்கிற அளவுக்கு ஆகிரும் என்றெல்லாம் சிலர் பேசினதும் கமல் ஆடிப்போய்விட்டார்” என்று பேசுகிறார் ஜெயினுலாபுதீன்.

இந்த வீடியோ சுமார் ஒருவருடத்துக்கு முன் குவைத்தில் எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆனால் விஸ்வரூபம் 2 வெளியாகும் நேரத்தில் தற்போது சமூகவலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஜெயினுலாபுதீன் பேசிய வீடியோ:

 

 

விஸ்வரூபம் 2 வெளிவராது: பி. ஜெயினுலாபுதீன்

 

 

More articles

Latest article