தமிழில் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் ஜிப்ரான் இசையமைப்பில் வெளியான படம் ‘ராட்சசன்’.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதன் தெலுங்கு ரீமேக்கிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் ஐ.எம்.டி.பி இணையத்தில் தமிழ்ப் படங்களில் அதிக புள்ளிகளைப் பெற்ற படம் என்ற சாதனையைப் பெற்றது .

இந்நிலையில் ‘ராட்சசன்’இந்தி ரீமேக்கை தெலுங்கில் ரீமேக் செய்த ரமேஷ் வர்மாவே இந்தி ரீமேக்கையும் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ‘ராட்சசன்’ கதைக்கான ஸ்க்ரிப்ட் ரெடியா என்று இயக்குநர் ராம்குமாரிடம் ட்விட்டர் வாயிலாக கேள்வி எழுப்பியிருந்தார் விஷ்ணு விஷால். அதற்கு பதிலளித்த ராம்குமார், போயிட்டு இருக்கு என கூறினார். இதன் மூலம் விரைவில் ‘ராட்சசன் 2’ தமிழில் உருவாக வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.