டிகை ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷ் நடித்த ’பெண்குயின்’, வரலட்சுமி நடித்த ’டேனி’, யோகி பாபு நடித்த ’காக்டெயில்’ படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது. தற்போது சூர்யா நடித்துள்ள ’சூரரைப் போற்று’ படமும் ஒடிடி தளத்துக்கு வந்து விட்டது. அக்டோபர் மாதம் 30ம் தேதி அமேசான் பிரைமில் இப்படம் வெளியா கிறது. இதையடுத்து விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தையும் ஒடிடி தளத்தில் வளைத்துப் போட கடும் முயற்சி நடக்கிறது.


கொரோனா பாதிப்பால் தியேட்டர் திறப்பு இப்போதைக்கு கிடையாது என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இதை ஒடிடி தளங்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன. சூர்யாவின் ’சூரரைப்போற்று’ ரூ 40 கோடிக்கு வாங்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் ’மாஸ்டர்’ படத்துக்கு இருமடங்கு அதாவது ரூ 80 கோடி அல்லது ரூ. 100 கோடி தரவும் சில ஒடிடி நிறுவனங் கள் விலையை ஏற்றிவிட்டிருக்கின்றன வாம். இதனால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தியேட்டரில்தான் படம் ரிலீஸ் என்று மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனம் பல முறை அறிவித்தாலும் நேரடியாக விஜய் இதுபற்றி தெரிவிக்காமல் மவுனம் சாத்தித்தால் மாஸ்டர் பட ஒடிடி ரிலீஸ் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்றே கூறப்படுகிறது.