விஷால் – டிம்பிள் ஹயாதி நடிப்பில் உருவாகியுள்ள ‘வீரமே வாகை சூடும்’ பிப் 4 ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை பொதுமுடக்கம் ஆகியவை தளர்த்தப்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

து.ப.சரவணன் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படம் ஜனவரி 26 ம் தேதி திரைக்கு வரும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் இப்போது பிப்ரவரி 4 ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.