நடிகர் விஷால் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் நடிகை லட்சுமி மேனனை கரம் பிடிக்கப்போவதாகவும் கடந்த சில தினங்களாக கிசுகிசுக்கப்பட்டது வந்தது.

பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களில் இணைந்து நடித்த இவர்களது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதிலும் குறிப்பாக 2014 ம் ஆண்டு வெளியான நான் சிகப்பு மனிதன் படத்தில் இவர்கள் இருவருக்கும் இடையிலான நெருக்கமான காட்சிகளில் இருந்த கெமிஸ்ட்ரி நிஜ ஜோடிகளை மிஞ்சுவதாக இருந்தது.

அதன் பிறகு வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்த லட்சுமி மேனன் பிறகு சொல்லிக்கொள்ளும்படியாக பெரிய படங்களில் எதுவும் நடிக்கவில்லை.

இந்த நிலையில் திடீரென்று லட்சுமி மேனனை நடிகர் விஷால் திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியானது.

இதனை மறுத்துள்ள நடிகர் விஷால், “தனக்கும் லட்சுமி மேனனுக்கும் இடையில் திருமணம் என்று வெளியான செய்தி வெறும் வதந்தி என்றும் இதற்கு முன் தன்னைப் பற்றி வெளியான தகவல் குறித்து கவலைப்பட்டதில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆனால் லட்சுமி மேனன் ஒரு நடிகை என்பதை விட இது ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கக் கூடும் என்பதால் இதை தான் மறுப்பதாக” விஷால் தெரிவித்துள்ளார்.