மொகாலி: இந்தியா – இலங்கை முதல் டெஸ்ட் கிரிக்கெட் நாளை தொடங்க உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியானது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டி என்பதால், கிரிக்கெட் ரசிகர்களிடையே மேலும் உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் விராட் கோலிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியுடன் நடந்த 3டி20 போட்டிகளில் 3–-0 என இந்திய அணி தொடரை வென்றது. இதையடுத்து, இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் நாளை பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியானது விராட் கோலிக்கு 100வது டெஸ்ட் மேட்ச் என்பதால் மேலும் சிறப்பு பெற்றுள்ளது.

இந்த டெஸ்ட்  போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சில் ஈடுபட்டு வருகின்றனர். அதே வேளையில் இந்த போட்டியில் ஆடும் வீரர்களிலும் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

அணியின் மூத்த வீரர்களான ரகானே, புஜாரா, விருத்திமான் சாஹா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனனர். அவர்களுக்கு பதிலாக, இளம் வீரர்களான பிரியங்க் பஞ்சால், கே.எஸ் பாரத், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஹனுமா விகாரி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த டெஸ்ட் போட்டியானது நாளை  காலை 9.30 மணிக்கு மொகாலியில் தொடங்குகிறது. இது இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் என்பது கூடுதல் சிறப்பாகும்.

145 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 70 வீரர்கள் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். அந்த வரிசையில் 71-வது வீரராக கோலி இணைகிறார். இந்திய அளவில் இந்த மைல்கல்லை எட்டும் 12-வது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெறுகிறார். சமீப காலமாக விராட் கோலி தனத திறமையாக முழுமையாக நிரூபிக்க தவறியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் அவர் மீண்டும் சாதனை நிகழ்த்துவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

விராட் கோலி கடைசியாக  கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்காளதேசத்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் சதம் அடித்திருந்தார். அதன்பிறகு அவர் சிறப்பாக ஜொலிக்காத நிலையில், தனது 100-வது டெஸ்டில் உக்ரதாண்டவம் ஆடுவார் என நம்பப்படுகிறது.

100-வது டெஸ்ட் கிரிக்கெட் விளையாட இருக்கும் விராட் கோலிக்கு உலகெங்கிலுமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள விராட் கோலிக்கு முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ சார்பாக விராட் கோலிக்கு ஒரு சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பேசிய சச்சின் டெண்டுல்கர்,  2007ஆம் ஆண்டு நாங்கள் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி கொண்டிருந்தபோது விராட் கோலியை பற்றி முதலில் கேள்விப்பட்டேன். அப்போதே விராட்கோலி திறமை பற்றி நிறைய பேர் பேச ஆரம்பித்துவிட்டனர். அண்டர் 19 உலக கோப்பையில் ஒரு வீரர் சிறப்பாக ஆடி வருவதாகவும் எதிர்காலத்தில் இந்திய அணிக்கு அவரே சிறப்பாக விளையாட போகிறார் என்றும் சக வீரர்கள் என்னிடம் கூறினார். இந்நிலையில் தற்போது விராட் கோலி 100-வது டெஸ்டில் விளையாட இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துக்கள். தற்போது வளர்ந்து வரும் பல இளைஞர்களின் ரோல் மாடல் நீங்கள். உங்களை பார்த்து பலர் கிரிக்கெட் விளையாட வந்துள்ளனர். அதுவே உங்களின் பெரிய சாதனை .

https://www.bcci.tv/videos/5556525/indias-greats-congratulate-virat-kohli-on-a-special-100