உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரினால், அங்கு மருத்துவம் படிக்க சென்ற  பல ஆயிரம் மாணாக்கர்கள் வெளியேற முடியாமல் சிக்கி உள்ளனர். அவர்களில் இரு இந்திய மாணவர்கள் துப்பாக்கி சூட்டினால் பலியாகி உள்ளனர். இதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவன் நவீன் என்பவரும் குண்டுக்கு பலியானார். இது குறித்து கருத்து தெரிவித்த அவரது தந்தை, நீட் தேர்வினால் தனது மகன் இந்தியாவில் மருத்துவம் படிக்க முடியாமல் போனது. அதனால்தான் அவனது கனவை நிறைவேற்றி உக்ரைனில் மருத்துவம் படிக்க சேர்த்ததாக கூறியிருந்தார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்பட பலர் மாணவன் சாவுக்கு நீட் தேர்வே காரணம் என்று விமர்சித்திருந்தனர். இதை சுட்டிக்காட்டும் வகையில் இன்றைய கார்டூன் அமைந்துள்ளது.