இபிஎஸ் ஆட்சியில் டெண்டர் விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் கணினிகள் மூலமே ஒப்பந்ததாரர்கள் டெண்டர் எடுத்துள்ளதும், ஒரே கணினி, ஒரே ஐ.பி. அட்ரஸ் மூலமே டெண்டருக்கான விண்ணப்பம் பதிவேற்றப்பட்டதும் சிஏஜி அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் லேப்டாப், காலணி வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக” கூறினார்.

மேலும், அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கியதில் ரூ.65.58 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும்

லேப்டாப்களை உரிய நேரத்தில் மாணவர்களுக்கு வழங்காததால் பேட்டரிகள் பழுதானதாகவும், 3,40 லட்சம் காலணிகள் பயன்படுத்தாமல் வீணானதாகவும் கூறியுள்ளார்.

சிஏஜி அறிக்கை : 2016 – 2021 ஆட்சியில் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பலகோடி முறைகேடு.. அஞ்சும் அதிமுக தலைகள்…