“யார் தடுத்தாலும் சொன்ன தேதியில் வெளியிடுவேன்…” : ‘எனிமி’ பட தயாரிப்பாளர்

Must read

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் எனிமி.

இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி ரவி, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குனராக டி.ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த படத்தின் விறுவிறுப்பான டீஸர் மற்றும் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காததால் படம் தள்ளிப்போவதாக சில தகவல்கள் வெளியாகி வந்தன,இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தயாரிப்பாளர் வினோத் படம் நிச்சயம் தீபாவளிக்கு வெளியாகும் என்று உறுதியளித்துள்ளார்.

More articles

Latest article