ஹீரோவாக மாறும் வில்லன்

Must read

ஜினியில் துவங்கி எத்தனையோ ஹீரோக்கள் தங்கள் திரைப்பயணத்தை வில்லனாக துவங்கியவர்கள்தான்
அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறார் ஆர்.கே. சுரேஷ். தாரைத்தப்பட்டை உட்பட பல படங்களில் தனது அதிரடி நடிப்பை வெளிப்படுத்தியவர்.
unnamed-23-1
“அடுத்து ‘பில்லா பாண்டி’ படத்தில் இயக்குநர் ராஜ் சேதுபதி இயக்கத்தில் நான் நாயகனாக நடிக்கிறேன். இப்படத்தில் என்னுடன் இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். மோனல் கஜார் ஒருவர். இன்னொருவர் புதுமுகம். இதன் தயாரிப்புப் பணியை இன்னொருவருடன் இணைந்து செய்கிறேன்.” என்கிறார் உற்சாகமாக.
சமீபத்தில் வெளியாக வெற்றி பெற்ற.. அதோடு தரமான படம் என்ற பெயரும் பெற்ற “தர்மதுரை” படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான்.  இதற்கு முன் இவரது ஸ்டூடியோ 9 நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட “சலீம்” படமும் தரமான திரைப்படம் என்ற பெயர் பெற்றது.
“நாம் உருவாக்கும் படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்பதோடு, தரமான படம் என்ற பெயரும் பெற வேண்டும் என்பதே என் விருப்பம்” என்கிறார் சுரேஷ்.
நிஜமாகவே ஹீரோதான் இவர்!

More articles

Latest article