பிரபல இந்தி சினிமா நடிகை மல்லிகா ஷெராவத் மீது பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கொலை முயற்சி தாக்குதல் நடந்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
சர்வதேச நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, இந்தி நடிகை மல்லிகா ஷெராவத், பிரான்ஸ் தலைநகர் பாரீஸூக்கு சென்றுள்ளார். அங்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து, சிரில் ஆக்ஸன்ஃபன்ஸ் என்ற தனது ஆண் நண்பருடன் தங்கியிருக்கிறார். .
அவர்கள் தங்கியிருக்கும் வீட்டுக்குள் இன்று நுழைந்த மர்ம நபர்கள் மல்லிகா ஷெராவத் மற்றும் அவரது நண்பரை கடுமையாக தாக்கினர். இருவரும் பயத்தில் அலறியதை அடுத்து மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அப்போது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
இது குறித்து, மல்லிகா ஷெராவத் பாரீஸ் நகர போலீசில் புகார் அளித்துள்ளார்.
சமீபத்தில் பாரீஸ் வந்த ஹாலிவுட் நடிகையான கிம் கார்டாஷியன், ஆண் நண்பருடன் தனிமையில் இருந்தபோது, இதேபோல மர்ம நபர்களால் வீடு புகுந்து தாக்கப்பட்டார். அதே நபர்கள்தான் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று பாரீஸ் காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.
இது குறித்து மல்லிகா, “முகமூடி அணிந்த மூவர் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். பணம், பொருள் எதையும் அவர்கள் கொள்ளையடித்துச் செல்லவில்லை” என்றார்.