சென்னை,
நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு ரஜினிக்கு முன்பே தெரியுமா? என்று கேள்வி எழும்பி உள்ளது. காரணம் அவரது மருமகன் மோடியின் அறிவிப்புக்கு சில நாட்கள் முன்பு பலகோடி ரூபாய் கடனை மொத்தமாக செட்டில் செய்துள்ளார்.
money1
கடந்த 8ம் தேதி இரவு திடீரென் பாரத பிரதமர் மோடி, “500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது” என்று அறிவித்தார். மாற்று நோட்டுகளை வங்கி அஞ்சலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.
இன்றளவும் தங்களிடம் உள்ள சில ஆயிரம் ரூபாய்களை மாற்ற, அல்லாடுகிறார்கள் பல கோடி மக்கள்.
இந்நிலையில் , “பிரதமர் மோடியின்  அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக நடிகர் ரஜினியின் மருமகனும் நடிகருமான  தனுஷ் தனது 40 கோடி கடனை திடீரென கடன் வாங்கியவர்களிடம் திரும்ப செலுத்தியிருக்கிறார்.
இதனால் லாபம் தனுஷ்க்குத்தான். ஆனால் கொடுத்த கடனை திரும்ப பெற்ற பைனான்சியருக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது” என்று இணையங்களில் தகவல் பரவி வருகிறது.
1rajni
இது குறித்து தீக்கதிர் நாளிதழும் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், “ பாஜக தலைமையில் இருந்து முன்கூட்டியே ரஜினி குடும்பத்திற்கு இந்த செல்லா நோட்டு தடை அறிவிப்பை தெரியப்படுத்திருக்க கூடுமோ” என்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது என்றும் தீக்கதிர் செய்தி வெளியிட்டுள்ளது.
நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு, அம்பானி, அதானி போன்ற பா.ஜ.க.வுக்கு நெருக்கமான பெரு முதலாளி களுக்கு முன்னதாகவே தெரியும் என்று ராஜஸ்தானை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. ஒருவரே தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.