உலகமயமாக்கல் என்ற வல்லரக்கன் சூறையாடிச் சென்ற எச்சங்கள்தான் இப்போது நம்மிடம் ஒட்டிக்கொண்டி ருக்கிறது.
அணியும் உடை அழிக்கப்பட்டு விட்டது. பெரும்பாலான தமிழர்கள் பிள்ளைக்கு தமிழில் பெயரிடுவதில்லை.
kanchi
பழையகஞ்சி பாத்திரத்தை ஓட்ஸ் கஞ்சி நிரப்பியிருக்கிறது. கலைகள் காணாமல் போய்விட்டன.
தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல், பச்சைக்குதிரை, இளவட்டக்கல், சறுக்குமரம் பற்றி இன்றைய குழந்தைகள் அறிவதில்லை. ஒவ்வொரு அடையாளமாக அழிந்தும், அழிக்கப்பட்டும் வருகிறது.
kanchi2
மிச்சமிருக்கும் ஒருசில தொன்ம அடையாளங்களில் ஏறுதழுவுதலும் ஒன்று. தமிழகத்தில் ஏறுதழுவுதலுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்திருப்பது அடையாள அழிப்பின் தீவிரவாதம்.
தொன்மங்களை அழிக்கும் தொடர்ச்சி. ஆளைக்கொல்லும் தீவிரவாத்தை விடக் கொடுமையானது. அடையாள அழிப்பு. அடையாளம் அழிக்கப் படும்போது அந்த இனமே அழிக்கப்படுகிறது.
தங்கள் கொள்கைகளுக்கு குறுக்கே எதுநின்றாலும் அதை அழித்து ஒழிப்பதுதான் தீவிரவாத தத்துவம். நம்முடைய சடங்கு முறைகள், வழிபாட்டு நிலைகள் அனைத்துமே வாழ்க்கையோடும், உணர்வோடும் கலந்துவிட்டவை. அந்த உணர்வுகளிலிருந்து தமிழர்களை முழுமையாக பிரித்தெடுக்க முடியவில்லை.
அப்படி பிரித்தெடுக்க முடிந்திருந்தால் பாஜகவின் கொள்கை இங்கும் எடுபட்டிருக்கும். கன்னியாகுமரியிலும், கோவையிலும் பாஜக காலூன்றியிருப்பதற்குக் காரணம் இந்து-கிறித்தவர், இந்து-முஸ்லீம் மதமோதலே தவிர பாஜவின் கொள்கை அல்ல.
kanchi3
இந்தப் பேருண்மையை புரிந்துகொண்ட பாஜக தமிழர்களின் தொன்மை அடையாளங் களை அழித்தால் மட்டுமே தமிழகத்தில் காலூன்றமுடியும் என்ற முடிவுக்கு வந்து நம்மீது பண்பாட்டுத் தாக்குதல்களை தொடங்கியிருக்கிறது.
பாஜக இந்துத்துவாவை முன்னெடுத்து வைக்கிறது. அவர்கள் அடையநினைக்கும் இந்துத்வா நீங்கள் நம்பிக்கொண்டு இருப்பதுபோல எல்லா இந்துக்களுக்கும் ஆதரவானது இல்லை.
திராவிடர்களுக்கு எதிரான போக்கு கொண்டது. அதனால்தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கல்லணை கட்டும் அளவுக்கு தொழில் நுட்ப அறிவும், குறள் எழுதும் அளவுக்கு உளவியல் அறிவும் கொண்ட நமக்கு கிராம பூஜாரிகள் பேரவை அமைத்து பூசைவைக்க சொல்லித்தர துணிந்தார்கள்.
அந்த முயற்சியும் அவர்களுக்கு முழுமையான பலனை தரவில்லை. சட்டத்தின் உதவியுடன் ஆடுகோழி பலியிட தடைவிதித்தார்கள்.
kanchi4
மாரியம்மன் நம்முடைய உழவுக்கடவுள். ஆதியில் ஒரு இனத்துக்கான கடவுளாக இருந்தாலும் தமிழர் அனைவருக்குமான தெய்வமாக ஆகிப்போனவள்.
சமயபுரத்தில் இருப்பவளும் நம்முடைய மாரியம்மன்தான். பூசாரி பூஜை செய்யும்வரை அவள் உனக்கான அம்மனாக இருந்தாள். அர்ச்சகர் உள்ளே நுழைந்ததும் நீ வெளியே நிறுத்தப்பட்டுவிட்டாய்.
அப்போது கடவுளுக்கு அருகில் செல்ல அருகதையற்றவன் என்ற எண்ணம் உனக்குள் விரியும். இதை விதைப்பதுதான் இத்துத்துவாவின் உண்மையான நோக்கம்.
நாம் எல்லோரும் இந்து என்கிற கயிற்றில் கட்டப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் நெருப்பை முன்னிறுத்துபவர்கள். நாம் நீரை கொண்டாடுபவர்கள்.
kanchi1
குழந்தை பிறந்ததும் சேனைத்தண்ணி தொட்டு வைப்பது, பெண்பிள்ளை வயதுக்கு வந்தால் மஞ்சள் தண்ணி ஊற்றி தீட்டு கழிப்பது, இறந்தால் நீர்மாலை எடுப்பது என அனைத்திலும் நீரே முன்னிலைப்படும்.
நாடார் சமூகத் திருமணங்களில் அனந்தரம் செய்வார்கள். தண்ணீரைத் தொட்டு மணமக்கள் மேலே தெளிக்கும் ஒருவித சடங்குமுறை.
இன்று எத்தனை வீட்டில் சேனைத்தண்ணி தொட்டு வைக்கிறோம்?
பிள்ளை வயதுக்கு வந்தால் அக்கினி வளர்த்து தீட்டு கழிக்கிறோம்.
இப்படி நீரிலிருந்து நாம் கொஞ்சம் கொஞ்சமாக நெருப்புக்கு மாற்றப்பட்டு வருகிறோம். இத்தகைய பண்பாட்டுச் சிதைவு முழுமை பெறவேண்டுமானால் ஒன்றுவிடாமல் அனைத்து தொன்மை அடையாளங்களையும் அழிக்க வேண்டும்.
jallikattu
கள் இறக்குவதற்கு தடைபோட்டவர்கள் டாஸ்மாக்கை திறந்து வைத்திருக்கிறார்கள். நோக்கம் புரிகிறதா? இப்படித்தான் எல்லா தளங்களிலும் நம் அடையாள அழிப்பு தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்தது என்பார்களே அதை இத்துத்துவா தீவிரவாதம் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.
முதலில் கோயில்களில் ஆடுவெட்ட தடைபோட்டார்கள். இப்போது ஏறுதழுவுதலுக்கு தடைபோட்டிருக்கிறார்கள். மிச்சமிருப்பது நாம்தான்.