சென்னை: புகார் நடவடிக்கை நிலுவையில் உள்ள எம்.எல்.ஏ ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ள கூடாது என  சபாநாயகருக்கு இ.பி.எஸ் தரப்பு வலியுறுத்தி உள்ளது.

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி நடவடிக்கை புகார் நிலுவையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா ஏற்கக்கூடாது என சட்டப்பேரவைத் தலைவரிடம் கழக சட்டமன்றக் கட்சிக் கொறடா  அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.

தமிழ்நாட்டில் அதிகார போதை ஆசையில் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தவெகவுக்கு தாவி வருகின்றனர். இதனால், அவர்கள் தங்களை தேர்ந்தெடுக்க தொகுதி மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு, தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகிவருகின்றனர்.

ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தவெகவுக்கு சென்ற நிலையில், இன்று அதிமுக  எம்எல்ஏ இசக்கி சுப்பையாவும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தவெகவில் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இநத் நிலையில்,  புகார் நடவடிக்கை நிலுவையில் உள்ள எம்.எல்.ஏ ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ள கூடாது என  சபாநாயகருக்கு இ.பி.எஸ் தரப்பு வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக, அதிமுக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, குதிரை பேரம் நடைபெறுவதை தடுக்கும் வகையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி நடவடிக்கை புகார் நிலுவையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் அளித்தால் அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது என சட்டப்பேரவைத் தலைவரிடம் கழக சட்டமன்றக் கட்சிக் கொறடா  அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். இந்நிகழ்வின் போது கழக சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சர்களுமான தளவாய் சுந்தரம், ஓ.எஸ். மணியன், கழக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் சபாநாயகர் அப்பாவு,  அ.தி.மு.க எல்.எல்.ஏ-க்கள் 3 பேர் கொடுத்த ராஜினாமா கடிதங்கள் மீது இவ்வளவு அவசரமாக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தேவையில்லை. கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தங்கள் சின்னத்தில் வெற்றி பெற்ற 25 சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிடாமி சபாநாயகரிடம் கொடுத்த மனு நிலுவையில் உள்ளது என்பதையும் சசுட்டிக்காட்டி உள்ளார்.

[youtube-feed feed=1]