விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் பர்ஸ்ட் லுக்….

Must read

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு வாரிசு என்று பெயரிடப்பட்டுள்ளது.

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரபு, பிரகாஷ் ராஜ், ஷ்யாம், ஜெயசுதா, சங்கீதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடிக்கின்றனர்.

தளபதி 66 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அடுத்த கட்ட படபிடிப்பு சென்று கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில், இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது.

More articles

Latest article