விஜயகாந் காலில் 3 விரல்கள் அகற்றம்! தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சி….

Must read

சென்னை: உடல்நலப் பாதிப்பு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு 3 கால் விரல்கள் அகற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததன்  விரல்கள் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான  விஜயகாந்த் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். இவர் கடந்த வாரம் திடீரென தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனை என்று தேமுதிக தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

விஜயகாந்துக்கு நடத்தப்பட்ட சோதனையில், நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த  அவரது கால்களுக்கு சரியான முறையில் ரத்தம் செல்வதில் தடக்கல் உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, அவரது காலில் 3 விரல்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் , ஒரிரு நாளில் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article