ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் பெரிய பட்ஜெட் படங்கள்… போட்டியை சமாளிக்குமா விஜய்யின் ‘பீஸ்ட்’

Must read

விஜய் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் மாதம் 14 ம் தேதி வெளியாக உள்ளதாக தெரிகிறது.

படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வேலைகள் பெருமளவு முடிந்த நிலையில் ரிலீசுக்கு தயாராகிவருகிறது ‘பீஸ்ட்’.

சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படம் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக வெளியீடு தள்ளிப்போவதாக கூறப்படுகிறது.

கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகளுக்கு தளர்வு ஏற்படும் பட்சத்தில் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை ஒட்டி திரையிட திட்டமிட்டு வருகின்றனர்.

அதேவேளையில், அஜீத்தின் ‘வலிமை’, எஸ்.எஸ். ராஜமௌலி-யின் ‘ஆர்.ஆர்.ஆர்.’, கேஜிஎஃப் 2 மற்றும் அமீர்கான் மற்றும் நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘லால் சிங் சட்டா’, சிவகார்த்திகேயன் நடித்த டான், சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ ஆகிய பெரிய பட்ஜெட் படங்களும் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

இதனால், வியாபார ரீதியாக விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு போட்டி நிலவி வருவதாகக் கூறப்படுகிறது, 2021 பொங்கலுக்கு ரிலீசான ‘மாஸ்டர்’ திரைப்படம் 300 கோடி ரூபாய் அளவுக்கு திரைத்துறையினருக்கு வியாபாரத்தை ஏற்படுத்தி தந்த நிலையில், ‘பீஸ்ட்’ அதே அளவுக்கு வசூலை பெற்றுத் தருமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

More articles

Latest article