தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் நீண்ட இடைவெளிக்குப் பின் தயாரிக்கும் படம் ‘ஜென்டில்மேன்-2’.

1993 ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ஜென்டில்மேன்.

இது இயக்குனர் ஷங்கரின் முதல் படம்.

இந்த படத்தை கே.டி. குஞ்சுமோன் தயாரித்திருந்தார் இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது பெயருக்கு முன்னால் ‘ஜென்டில்மேன்’ என்ற அடைமொழியையும் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ஜென்டில்மேன் இன்டர்நேஷனல் என்றும் பெயர் வைத்தார் கே.டி. குஞ்சுமோன்.

நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது மீண்டும் பட தயாரிப்பில் நுழைந்திருக்கும் குஞ்சுமோன் தனது புதிய படத்திற்கு ஜென்டில்மேன்-2 என்று பெயர் வைத்திருக்கிறார்.

இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் படக்குழு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அறிவித்துள்ள கே.டி. குஞ்சுமோன்.

ஜென்டில்மேன்-2 படத்தின் இசையமைப்பாளர் யார் என்று சரியாக சொல்லும் மூன்று நபர்களுக்கு தங்க காசு பரிசளிப்பதாக அறிவித்துள்ளார்.