தமிழக சட்டப்பேரவையின் காங்கிரஸ் கொறடாவாக விஜயதரணி நியமனம்

Must read

சென்னை:
மிழக சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சி கொறடாவாக எஸ்.விஜயதரணி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சி தலைவராக கு.செல்வப்பெருந்தகை, துணைத் தலைவராக எஸ்.ராஜேஷ்குமார் ஆகியோர், கடந்த மே 23-ம் தேதி நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் கட்சியின் மற்ற நிர்வாகிகளையும் நியமித்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மு.அப்பாவு-க்கு இன்று (ஜூன் 20) கே.எஸ்.அழகிரி எழுதிய கடிதத்தின் படி,

“தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் – கு.செல்வப்பெருந்தகை

துணைத் தலைவர் – எஸ்.ராஜேஷ்குமார்

கொறடா – எஸ்.விஜயதரணி

துணை கொறடா – ஜெ.எம்.ஹெச்.ஹசன் மௌலானா

செயலாளர் – ஆர்.எம்.கருமாணிக்கம்

பொருளாளர் – ஆர்.ராதாகிருஷ்ணன்

அகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்”.

இவ்வாறு அந்த கடிதத்தில் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

More articles

Latest article