சென்னை:
மிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

கொரோனா தொற்று பாதிப்பு அடிப்படையில் மூன்று வகையாக மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 21 ஆம் தேதி (திங்கள்கிழமை) நிறைவடைய உள்ள நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில் அனைவரும் எதிர்பார்த்த பொதுப்போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்குள் 50% பயணிகளுடன் பேருந்து போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று குறைந்த 23 மாவட்டங்களில் 50% பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகள் தொடரும் – தமிழக அரசு
  • தமிழகத்தில் மாவட்டங்களுக்குள் 50 % பஸ்கள் இயக்க திட்டம்
  • மாவட்டங்களுக்குள் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி
  • கடைகள் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி