கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 50% ஆஃபர்- மதுரை சலூன் கடைக்காரர் அதிரடி

Must read

மதுரை:
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 50% ஆஃபர் வழங்கப்படும் என்று மதுரையில் சலூன் எல்லோரா ஃபேமிலி சலூன் நடத்தி வரும் சலூன் கடைக்காரர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், மக்கள் அனைவரும் தயங்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில கடைகளில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மதுரையில் உள்ள எல்லோரா ஃபேமலி சலூன் கடையில், கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழுடன் வருபவர்களுக்கு, ஹேர்கட், பேசியல், வாக்சிங் மற்றும் அனைத்து பியூட்டி சர்வீஸ்களுக்கும் 50% ஆஃபர் வழங்கப்படுகிறது.

கடையின் உரிமையாளர் கார்த்திகேயன் இதுகுறித்து கூறுகையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் 50 சதவீத தள்ளுபடி நாங்கள் வழங்குகிறோம். ஏனென்றால் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் மூன்றாவது அலையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article