சென்னை: தவெக தலைவர் விஜய் சென்னையில் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதிக்கு திடீர் விசிட்  செய்து கட்சியினை சந்தித்த நிலையில், அங்க விசில் கோலம் வரைந்து வாக்கு சேகரித்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கும் தவெக, மற்ற கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறது. இந்த நிலையில், சென்னையில் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதிக்கு விஜய் திடீர் விசிட்  அடித்து மக்களை சந்தித்ததுடன், வாக்காளர் வீட்டின் முன்புவிசில் கோலம் வரைந்து வாக்கு சேகரித்தார்.

விஜய் எந்தவித முன்னறிவிப்பும் இன்று வருகை தந்ததால், மக்கள் கூட்டம் காணப்படவில்லை. இதனால், அவர்  பெரம்பூரில்  தவெக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய விஜய் வாசலில் காேலம் வரைந்து வாக்கு சேகரித்தார்.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்த தேர்தலில்   திராவிட கட்சிகளுக்கு மாறாக மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். இக்கட்சி தலைவரான விஜய் பெரம்பூர் உள்பட இரு தொகுதிகளிலும் களமிறங்கி உள்ளார்.

இந்த நிலையில், தனது  கட்ச நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக விஜய்  நேற்று மாலை (ஏப் 18) திடீரென  பெரம்பூர் சென்றார். அங்கு தனது கட்சி நிர்வாகிகளுடன் கட்சிப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பெரம்பூரில் நடக்கும் பரப்புரை பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், கட்சியின் வாசலில் தனது கட்சி பெண் நிர்வாகிகளுடன் இணைந்து விசில் கோலமிட்டார்.

விஜய் வந்தது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் தவெக அலுவலகம் முன்பு குவிந்தனர். திடீரென விஜய் வந்ததால், எந்தவித பரபரபபும் இன்றி அந்த பகுதி காணப்பட்டது. பின்னர், சிறிது நேரத்தில் விஜய் வருகை குறித்த தகவல் பரவியதால், அவரது கட்சி தொண்டர்கள், கட்சி அலுவலகத்தில் குவியத் தொடங்கினார். அவர்களை விஜய் கட்சி அலுவலகத்தின் மாடியில் இருந்து அவர்களுக்கு கைகாட்டினார். பின்னர், வாசலில் குவிந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு கைகொடுத்து வாக்கு சேகரித்தார்.

தமிழ்நாடு  தமிழ்நாடு முழுவதும்  பிரசாரம் செய்து தனது கட்சியின் வேட்பாளர்கள் அனைவரையும் ஆதரித்து  பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அடுத்த கட்டமாக,   விடுபட்ட தொகுதிகளில் பிரசாரம்  மேற்கொள்ள உள்ளார்.  இன்று  சென்னையின் உள்ளே அவர் பரப்புரையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

[youtube-feed feed=1]