தில்லி பிரசாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’ .

விஜய் சேதுபதி ஜோடியாக அதிதி ராவ் நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு பிரேம் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ளது சன் டிவி.

படப்பிடிப்பு குறித்த அப்டேட்டை சமீபத்தில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வழங்கியது. 35 நாட்கள் கொண்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும், மீதம் உள்ள 40 நாட்கள் கொண்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படத்தில் இருந்து முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. அண்ணாத்த சேதி எனும் இப்பாடலை, 96 புகழ் கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தாவின் இசையில் ராப் இசைப்பாடகர் அறிவு இப்பாடலை பாடியுள்ளார்.