சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி கதை நாயகனாக நடித்திருக்கும் படம், ‘மாமனிதன்’.
ஒய்.எஸ்.ஆர். தயாரிப்பு நிறுவனம் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். மேலும் இளையராஜா, கார்த்திக் ராஜா ஆகியோருடன் இணைந்து இசையமைத்தும் இருக்கிறார்.
மாமனிதன் படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். குரு சோமசுந்தரம், ஷாஜி சென், ஜுவல் மேரி, அனிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
இப்படம் வரும் 20ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் மாமனிதன் படத்திலிருந்து என்ன நடக்குது எனும் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
இப்பாடலை நாட்டுப்புற பாடகரும் சூப்பர் சிங்கர் போட்டியாளருமான முத்துசிற்பி பாடியுள்ளார்.
அந்த பாடலின் வீடியோ..