எஸ்.கே.எல்.எஸ். கேலக்ஸி மால் புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் ஸ்டோரிஸ் தயாரிக்க, சர்ஜுன் கே.எம் இயக்கத்தில், கலையரசன் – மிர்னா ஜோடியாக நடித்துள்ள படம், புர்கா.
2021 நவம்பரில் படப்பிடிப்பு நிறைவடைந்து, டிசம்பர் 2021 முதல் திரைப்பட விழா சுற்றுகளில் கலந்துகொண்டது.
இத்திரைப்படம், நியூயார்க்கில் நடைபெற்ற, இந்திய திரைப்பட விழாவில் (NYIFF) மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.மேலும் கலையரசன் மற்றும் மிர்னா சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகை பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.
படக்குழுவிவரம்:
ஜி பாலமுருகனின் ஒளிப்பதிவு, இசை ஆர் சிவாத்மிகா, எடிட்டிங் பி பிரவின் பாஸ்கர், ஆடை வடிவமைப்பு மீனாட்சி ஸ்ரீதரன் மற்றும் சிறப்புத்தோற்றம் ஈடிணையற்ற மூத்த ஜாம்பவான் ஜிஎம் குமார் நடித்துள்ளார்.
வ்யூஃபைண்டர் ஃபிலிம் புரொடக்ஷன்ஸின் திலானி ஆர், திரைப்பட விழாக்கள் மற்றும் விருதுகளில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.