ஜூன் 22 ஆம் தேதி தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் நடிகர் விஜய். ரசிகர்கள் அனைவரும் அவரின் பிறந்தநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் பிறந்தநாள் தினத்தில் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 66’ தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இந்தப் படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கவுள்ளார், தில் ராஜு தயாரிக்க உள்ளதார்.

மேலும், விஜய் தற்போது நடித்து வரும், ‘தளபதி 65’ படத்தின் போஸ்டர் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இரண்டு படங்கள் பற்றிய அறிவிப்பு விஜய் பிறந்தநாளில் வர இருப்பதால் இரட்டை விருந்து கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.