பிரபல இயக்குனர் ராமுடன் கூட்டணி அமைக்கும் ஆர்.ஜே.பாலாஜி….!

Must read

நடிகர், இயக்குனர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கும் ஆர்.ஜே.பாலாஜி, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் எம்.ஏ, தங்க மீன்கள், பேரன்பு போன்ற படங்களை இயக்கிய ராம், அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ராமின் அடுத்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக சிம்பு, நிவின்பாலி பெயர்கள் அடிப்பட்டது. சிம்புவும், இயக்குனர் ராமும் பேசி கொள்வதை போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது ஆர்.ஜே.பாலாஜி அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படத்தை ராம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article