எம்.எல்.ஏ. ஆபீஸில் ‘தன லாபம்’ வானதி சீனிவாசனை கலாய்க்கும் எஸ்.வி. சேகர்…!

Must read

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவான வானதி சீனிவாசன் தன் அலுவலக திறப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார்.

அலுவலக சுவரில் தன லாபம் என்று எழுதியிருந்ததை பார்த்த சமூக வலைதளவாசிகள் அவரை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

இந்நிலையில் தன லாபம் என்று போட்டு எஸ்.வி. சேகர் ட்வீட் செய்திருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தனலாபம் புகைப்படத்துடன் எஸ்.வி. சேகர் ட்விட்டரில் :

உங்க தொழில்?
எம்.எல்.ஏ.
ஓ அதையே தொழிலாக்கிட்டீங்களா
அதான் எம் எல் ஏ ஆபீஸ்லயே லாக்கர் வைச்சு பூசை போட்டிருக்கேன்.
கேக்கும் போதே புல்லரிக்குது. உங்களை பேட்டியெடுத்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.

மீ டூ
ஐயையோ என்னை விட்டுடுங்க
அந்தப் பெண்ணுக்கு ஆங்கிலம் புரியாம ஓடுது என்று தெரிவித்துள்ளார்.

வானதி அக்கா மீதான கடுப்பில் இப்படி ட்வீட் செய்துள்ளார் எஸ்.வி. சேகர். தொடர்ந்து இது போன்று காமெடி பண்ணவும் சார். கொரோனா கஷ்ட காலத்தில் சிரிக்க வைக்கிறீர்கள் என தெரிவித்துள்ளனர் நெட்டிசன்கள்.

 

More articles

Latest article