இயக்குநர் நெல்சன் திலிப்குமார் நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். விஜய்யின் 47-வது பிறந்தநாளை முன்னிட்டு திங்கட்கிழமை ‘பீஸ்ட்’ படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் விஜய்யின் ‘பீஸ்ட்’ மற்றும் சிம்பு – நெல்சனின் நின்று போன ‘வேட்டை மன்னன்’ படத்திற்கும் தொடர்பு இருப்பதாக சிலர் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர் .

நடிகர் சிலம்பராசனுடனான நெல்சனின் முதல் படம் ‘வேட்டை மன்னன்’
பாதி வேலைகளை முடித்த பின்னர் நிறுத்தப்பட்டது.

‘பீஸ்ட்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் ஒரு துப்பாக்கியுடன் காணப்படுகிறார். அதனால் ‘வேட்டை மன்னன்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகியவை ஒரே மாதிரியான கதையோட்டங்களைக் கொண்ட படங்கள் என்ற யூகத்தை இது எழுப்புகிறது.