‘வலிமை’ திரைப்படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக வினோத்தின் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது . இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்க உள்ளார்.

‘வலிமை’ அப்டேட் இன்னும் வெளியாகாத நிலையில் அஜித்தின் 61வது திரைப்படம் பற்றிய பேச்சுக்கள் இப்போதே சமூக வலைத்தளங்களில் பேச ஆரம்பித்துள்ளனர் .

ஆக்ஷன் கலந்து த்ரில்லர் படமாக உருவாக்கப்பட உள்ள இந்த படத்தின் ப்ரீ ப்ரோடக்ஷன் வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறதாம். ஜுலை மாதம் முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளதாம். அஜித்தை புதிய கோணத்தில் ஆக்ஷன் ஹீரோவாக காட்டுவதாக இந்த படம் இருக்கும் என கூறப்படுகிறது.

வலிமை படம் ரிலீசாவதற்கு முன்பே தல 61 படப்பிடிப்பு துவங்கி விடும் என்றே கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.