நடிகர் அதர்வாவின் புதிய திரைப்படமாக அட்ரஸ் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது.

நடிகர் அதர்வா மற்றும் கோலிசோடா 2 பட கதாநாயகன் இசக்கி பாரத் இணைந்து நடித்துள்ள அட்ரஸ் திரைப்படத்தை இயக்குனர் ராஜா மோகன் இயக்கியுள்ளார்.

இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள அட்ரஸ் திரைப்படத்தை தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா தயாரித்துள்ளார். மலை கிராமத்தில் வசிக்கும் மக்களின் சிரமங்களை குறித்துப் பேசும் வகையில் அமைந்திருக்கும் அட்ரஸ் திரைப்படத்தின் டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .