வெண்ணிலா கபடி குழு-2 திரைப்படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது !

Must read

வெண்ணிலா கபடி குழு-2 பூஜை

7 வருடங்களுக்கு முன் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த திரைப்படம் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு. இப்படம் மூலம் விஷ்ணு விஷால் , சூரி , அப்பு குட்டி போன்ற திறமையான நடிகர்கள் அறிமுகமானார்கள். இவர்களை அறிமுகபடுத்திய இயக்குநர் சுசீந்திரன் இயக்கி இருந்த இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. மறுபடியும் கபடியை மையமாக கொண்டு எடுக்கப்படவுள்ள இப்படம் வெண்ணிலா கபடி குழு-2 என தயாராகுகிறது.
இப்படத்தை சுசீந்திரன் வழங்க சாய் அற்புதம் சினிமாஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் விக்ராந்த் நாயகனாக நடிக்கிறார். அவரது ஜோடியாக அர்த்தனா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மேலும் பசுபதி , கிஷோர் , சூரி , ரவி மரியா , யோகி பாபு , அப்பு குட்டி , லக்ஷ்மி , பாவா லக்ஷ்மணன் , திருமா , விஜய் கணேஷ் , பன்னீர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
கதை – திரைக்கதை – வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் செல்வ சேகரன். இவர் பல முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பனி புரிந்தவர். மூலக் கதை: சுசீந்திரன் , இசை: V. செல்வ கணேஷ் , ஒளிப்பதிவு: E. கிருஷ்ணா , படத்தொகுப்பு: காசி விஷ்வநாத் , கலை: சக்தி வெங்கட் ராஜ்.M , ஸ்டன்ட்: அனல் அரசு , தயாரிப்பு: A. பூங்காவனம் , N.ஆனந்த.
இப்படத்தின் படபிடிப்பு இன்று (10.12.16) முதல் ஆரம்பமாகியது. மாம்பாக்கம் கோவளஞ்ச்சேரி முனீஸ்வரர் கோவிலில் ஆரம்பமாகி தொடர்ந்து படபிடிப்பு நடைபெறுகிறது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article