செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் பார்வையாளர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.  வனத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த சரணாலயத்துக்கு வட கிழக்கு பருவமழைக்குப் பிறகு உலகெங்கும் இருந்து பறவைகள் வருவது வழக்கமாகும்.

 இங்கு அவை முட்டையிட்டு குஞ்சு பொறித்து பின் திரும்பி விடுகின்றன.  பறவைகளைக் காண பலரும் வேடந்தாங்கலுக்கு வருவது வழக்கமாகும்.  கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கடந்த ஏப்ரல் முதல் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பார்வையாளர்களுக்கு மூடப்பட்டது.   தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளது

தமிழகத்தில் மழை ஓரளவு பெய்து வருவதால் இங்குள்ள ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளது.  அரசு வழிகாட்டுதலின் படி தற்போது கொரோனா கட்டுப்பாடுகளுடன் சரணாலயங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.   இதையொட்டி ஆறு மாதங்களுக்குப் பிறகு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று முதல் மீண்டும் பார்வையாளர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.