புதுடெல்லி:

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால், 200 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.


ஸ்டெர்லைட் காப்பர் ஆலையால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதாகக் கூறி தூத்துக்குடி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதற்கு தமிழக அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஸ்டெர்லைட் நிறுவன தலைவர் அனில் கூறும்போது, ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தியை நிறுத்திய பிறகு, காப்பர் ஏற்றுமதி மூலம் இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய அன்னிய செலாவணி குறைந்துள்ளது.

இதனால் வருவாயில் 200 மில்லியன் டாலரை நாங்கள் இழந்துள்ளோம்.

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா விரும்புகிறார். மூடப்பட்டதால் பொருளாதார ரீதியான அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 20 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.

இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியிலிருந்து 40% தேவையை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பூர்த்தி செய்கிறது.

ஆலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தபோது, போராட்டம் மீண்டும் தொடர்ந்தது. ஸ்டெர்லைட்டால் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படும் என்பதை வேதாந்தா தொடர்ந்து மறுத்து வருகிறார்.

இந்தியாவில் அதிக தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு. வேலையை உருவாக்க வேண்டும் என்ற நிபந்தனையால், சமீபகாலமாக வெளிநாட்டு முதலீடு குறைந்து வருகிறது.

திரும்பச் சொல்கிறேன். காப்பரை தயாரிக்க உலகம் எங்களை சொல்லவில்லை. நாங்கள் ஏற்றுமதி செய்ய வேண்டும் என உலகம் விரும்புகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பதால் இந்தியாவின் காப்பர் ஏற்றுமதியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

விரைவில் நல்ல தீர்வு ஏற்படும் என்று நம்புகின்றேன் என்றார்.